;
Athirady Tamil News

ஈரானின் வான்வெளியை முழுமையாக கைப்பற்றுவோம்: அமெரிக்கா அறிவிப்பு

0

வாஷிங்டன் டி.சி.

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து 4 நாட்களாக நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், இந்திய பெருங்கடலில் இருந்த ஈரான் போர்க்கப்பலை அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் ஒன்று கடலுக்கு உள்ளே இருந்து குண்டுவீசி கடுமையாக தாக்கியது. இதில் அந்த கப்பல் பல துண்டுகளாக உடைந்தும், வெடித்து சிதறியும், தீப்பற்றி எரிந்தும் போனது. அந்த கப்பலை, அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் தாக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவின் பாதுகாப்பு மந்திரி பீட் ஹெக்சேத் இன்று கூறும்போது, 2-ம் உலக போருக்கு பின் முதன்முறையாக இதுபோன்று நீருக்கடியில் இருந்து எதிரி நாட்டு கப்பல் ஒன்றை மூழ்கடிக்கும் தாக்குதல் நடந்து உள்ளது. அந்த போருக்கு பின்னர் இதனை நாங்கள் தற்போது செய்திருக்கிறோம் என கூறினார்.

சர்வதேச நீர்நிலைகளில் தங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது. நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என நினைத்து விட்டனர். அதனை தொர்பிடோ வகை நீர்மூழ்கி கப்பல், கடலுக்குள் மூழ்கடித்துள்ளது. அமைதியான மரணம் என கூறியுள்ளார்.

தொடர்ந்து ஹெக்சேத் கூறும்போது, நேற்றிரவு முதல், இன்னும் ஒரு சில நாட்களில் இதனை முடித்து விடுவோம். உலகின் இரு பெரும் சக்தி வாய்ந்த விமான படைகளான எங்களை ஈரானால் வெல்ல முடியாது. ஈரானின் வான்வெளியை அமெரிக்காவும், இஸ்ரேலும் முழுமையாக கைப்பற்றும் என கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.