;
Athirady Tamil News

மியா கலிஃபாவுக்கு அடித்த ஜாக்பாட்! ஸ்பெயின் அணியின் வெற்றியால் ரூ. 15.92 கோடி பரிசு!

0

பிஃபா உலகக் கோப்பையில் ஸ்பெயின் அணியின் வெற்றியால் நடிகை மியா கலிஃபாவுக்கு சுமார் ரூ. 15.92 கோடி ஜாக்பாட் அடித்திருக்கிறது.

அமெரிக்காவின் நியூஜெர்சியில் கடந்த திங்கள்கிழமை (ஜூலை 19) அதிகாலை நடைபெற்ற பிஃபா கால்பந்து உலகக் கோப்பைத் தொடரின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

16 ஆண்டுகளுக்குப் பின்னர் கோப்பையை வென்றதால், கால்பந்து திடலே அதிர்ந்தது. ஸ்பெயின் அணியின் ஃபெர்ரன் டோரஸ், 106-ஆவது நிமிஷத்தில் போட்ட கோலால் ஆர்ஜென்டீனா அணியின் வீரர்களும் ரசிகர்களும் சோகத்தில் மூழ்கினர்.

இந்த உலகக் கோப்பை வெற்றி ஸ்பெயின் ரசிகர்கள் மட்டுமின்றி, மற்றொருவருக்கும் மறக்க முடியாத உலகக் கோப்பை போட்டியாக அமைந்திருக்கிறது. அவர் யார் தெரியுமா?

அவர்தான் வயது வந்தோருக்கான படங்களில் நடித்து பிரபலமான நடிகை மியா கலிஃபா. மேற்காசிய நாடுகளில் ஒன்றான லெபனான் நாட்டைச் சேர்ந்த மியா கலிஃபாவும் உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியைப் பார்ப்பதற்காக அமெரிக்கா சென்றிருந்தார். இறுதிப் போட்டியின் போது மியா கலிஃபா, ஸ்பெயின் வீரர் லமின் யமாலின் ஜெர்ஸியுடன் ஸ்பெயின் அணிக்கு ஆதரவளித்திருந்தார்.

அவர் ஸ்பெயின் அணி வெற்றி பெறும் என்று இணைய பெட்டிங் தளத்தில் 10 லட்சம் டாலர்கள் (ரூ. 9.65 கோடி) பந்தயம் கட்டியதாகக் கூறப்படுகிறது. போட்டி தொடங்கி 90 நிமிடங்கள் கடந்தும், கூடுதல் நேரத்திலும் இரு அணியிலும் யாரும் கோல் போடவில்லை. 106-ஆவது நிமிடத்தில் டோரஸ் போட்ட கோலின் மூலமாக மியா கலிஃபாவுக்கு அந்த அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது.

இதுதொடர்பாக மியா கலீஃபா வெளியிட்டுள்ள விடியோவில், “நம்பிக்கை வைத்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளேன். என் தாய் நாடான ஸ்பெயினை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்; என் உடலில் ஒரு துளி கூட ஸ்பானிய ரத்தம் இல்லை” என்று நகைப்புடன் பதிவிட்டுள்ளார்.

ஸ்பெயின் வெற்றியால், மியாவுக்கு ரூ. 9.65 கோடியில் ரூ. 15.92 கோடியாக உயர்ந்தது. 1.65 மில்லியன் டாலர்கள் பரிசாகக் கிடைத்தது. இருப்பினும், அந்த முழுத் தொகையும் லாபம் இல்லை என்பதாலும், டாலருக்கு நிகரான மதிப்பு மாறுதலால், சுமார் ரூ. 6.27 கோடி அவருக்கு கிடைக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.