;
Athirady Tamil News

ஈரான் மீது 7- வது நாளாக அமெரிக்கா தாக்குதல்: கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கும் அபாயம்

0

அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் மேலும் தீவிரமடைந்துள்ளது. தொடர்ந்து 11-வது நாளாக அமெரிக்க ராணுவம் ஈரானின் பல்வேறு ராணுவ இலக்குகள் மீது வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. ஈரானில் உள்ள ஏவுகணை ஏவுதளங்கள், டிரோன் தளங்கள், ராணுவ கட்டளை மையங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் கடல்சார் ராணுவ வசதிகள் உள்ளிட்ட இலக்குகள் துல்லியமாக குறிவைத்து தாக்கப்பட்டதாக அமெரிக்க ராணுவ கட்டளை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, ஈரானின் தாக்குதல் திறனை மேலும் பலவீனப்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க தரப்பு கூறியுள்ளது.

எண்ணெய் விலை
இதற்கிடையில், ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் மற்றும் சர்வதேச வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்வு குறித்த அச்சமும் நீடித்து வருகிறது. அதே நேரத்தில், அமெரிக்காவின் தொடர் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க ஈரானும் தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச நாடுகள் கவலை
இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தூதரக பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளதால் மோதல் மேலும் விரிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. ஈரான் – அமெரிக்கா தொடர் மோதலால் கச்சா எண்ணெய் விநியோகம் மேலும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.