;
Athirady Tamil News

யாழுக்கு கடத்தி வரப்பட்ட 20 இலட்ச ரூபாய் பெறுமதியான தேக்க மரக்குறிகள்

0

யாழ்ப்பாணத்திற்கு சுமார் 20 இலட்ச ரூபாய் பெறுமதியான தேக்க மரத்தினை கடத்தி வந்த சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வன்னி பகுதியில் இருந்து பரவூர்தி ஒன்றில் சட்டவிரோதமான முறையில் மரத்தினை கடத்தி வந்து மீசாலை பகுதியில் உள்ள மரக்காலையில் அவற்றை இறங்குவதாக சாவகச்சேரி பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றது.

தகவலை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பாரவூர்தியை கைப்பற்றியதுடன் , அதனுள் இருந்த 52 தேக்க மர குற்றிகளையும் மீட்டனர்.

அதனை அடுத்து பாரவூர்தி சாரதியை கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றதுடன் , கைப்பற்றப்பட்ட பாரவூர்தி மற்றும் மரக்குறிகளையும் பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட மர குற்றிகளின் பெறுமதி சுமார் 20 இலட்ச ரூபாய் என தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.