;
Athirady Tamil News

இலங்கையில் நேர்ந்த கொடூரம் ; தந்தையின் கையில் முடிந்த மகன் வாழ்க்கை

0

புத்தளம் – மகாகும்புக்கடவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சொஹொன்கல்ம பகுதியில் நேற்று வியாழக்கிழமை (26) இரவு இடம்பெற்ற மோதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணை
உயிரிழந்தவர் சொஹொன்கல்ம பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞர் தனது தந்தையுடன் வீட்டில் மது அருந்திக்கொண்டிருந்தபோது அவர்களுக்கிடையே ஏற்பட்ட தர்க்கம் மோதலாக மாறியுள்ளது.

இதன்போது, தந்தை தனது மகனை கோடாரியால் தாக்கியதில், அவர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 63 வயதுடைய தந்தை தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் நீதவான் விசாரணையின் பின்னர் மேலதிக பிரேத பரிசோதனைகளுக்காக ஆனைமடு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

மகாகும்புக்கடவல பொலிஸார் இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.