;
Athirady Tamil News

காலி மீன்பிடி துறைமுகத்தில் தீ விபத்து

0

காலி மீன்பிடி துறைமுகத்தில் இன்று (08) தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. மீன்பிடி படகுகள் எரிந்து சேதமடைந்துள்ளன.

இந்நிலையில் காலி மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு, கடற்படை, காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் மீனவ சமூகத்தினரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீ விபத்தின்போது மீன்பிடி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த 04 கடற்றொழில் படகுகளே இவ்வாறு தீயில் எரிந்துள்ளன.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.