நிந்தவூர் பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான பாதீடு நிறைவேற்றம்
நிந்தவூர் பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான பாதீடு நிறைவேற்றப்பட்டுள்ளது.
தவிசாளர் சட்டத்தரணி ஏ .எல். றியாஸ் ஆதம் தலைமையில் வியாழக்கிழமை (26) நிந்தவூர் பிரதேச சபையின் அமர்வு நடைபெற்ற போது 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 06 உறுப்பினர்கள் (தவிசாளர் உட்பட) ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
இதன் போது குறித்த பாதீடு நிறைவேற்றத்தின் போது முஸ்லிம் காங்கிரஸ் 03 உறுப்பினர்கள் எதிராகவும் தேசிய மக்கள் சக்தி 02 உறுப்பினர்கள் நடுநிலைமை வகிப்பதாகவும் சபையில் குறிப்பிட்டனர்.
இந்நிலையில் குறித்த சபை அமர்வின் போது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஒரு உறுப்பினரும் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் உதவி தவிசாளரான உறுப்பினரும் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
