;
Athirady Tamil News

ஈராக்: சாலையில் கவிழ்ந்து தீப்பற்றி எரிந்த பஸ் – 21 பேர் பலி

0

பாக்தாத்,

மத்திய கிழக்கில் அமைந்துள்ள நாடு ஈராக். அந்நாட்டின் நஜப் நகரில் புகழ்பெற்ற இஸ்லாமிய மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த வழிபாட்டு தலத்திற்கு நாட்டின் பல்வேறு நகரங்களிலும் இருந்து மக்கள் வந்து வழிபாடு நடத்தி செல்கின்றனர்.

அந்த வகையில், பசுரா மாகாணத்தை சேர்ந்த 41 பேர் பஸ்சில் நஜப் நகருக்கு ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளனர். நஜப் நகரில் வழிபாட்டை முடித்துவிட்டு பஸ்சில் பசுரா நகருக்கு திரும்பிகொண்டிருந்தனர்.

21 பேர் பலி
இந்நிலையில், அந்நாட்டின் தய் கியுர் மாகாணம் நசிர்ஹாய் நகரில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று மதியம் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் பஸ் தீப்பற்றி எரிந்தது. இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 21 பேர் தீயில் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 20 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.