;
Athirady Tamil News

தமிழர் பகுதியில் 23 வயது இளைஞனுக்கு வேலைத்தளத்தில் நடந்த துயரம் ; பறிபோன உயிர்

0

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி – நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் தொழிலகத்தில் தொழில் புரிந்து கொண்டிருந்த நிலையில் இளைஞன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இன்று (09) காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பிரேத பரிசோதனை
கிளிநொச்சி நகரைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் தர்மபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.