;
Athirady Tamil News

மட்டக்களப்பு கிணறு விவகாரத்தில் முக்கிய தகவல் ; ஒவ்வொரு குற்றவாளிக்கும் நேர்ந்துள்ள கதி

0

மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பெண்கள் கடத்தல் மற்றும் கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று (27) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பிரதான சந்தேகநபர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராகக் கடுமையான விளக்கமறியல் மற்றும் தடுப்புக் காவல் உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

விளக்கமறியல் உத்தரவு
இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான பெண்ணுக்கும், அவரது சகோதரனுக்கும் எதிர்வரும் 2026.03.30ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, முதலாம் பிரதான சந்தேகநபரைத் தொடர்ந்து மேலும் 3 நாட்களுக்குப் காவல்துறை காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், நேற்று கைது செய்யப்பட்ட மயக்கமருந்து வைத்திருந்த முச்சக்கர வண்டி ஓட்டுநரை 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யவும், கொள்ளையிடப்பட்ட நகைகளை வாங்கிய இரண்டு நகைக்கடை வியாபாரிகளுக்கு எதிர்வரும் 2026.04.02 வரை விளக்கமறியலை நீடிக்கவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.