;
Athirady Tamil News

திடீர் தொழிநுட்பகோளாறு! அடையாள அட்டைகளை பெற முடியாமல்போனோருக்கு முக்கிய அறிவுறுத்தல்

0

இலங்கை ஆட்பதிவு திணைக்களத்தின் கொழும்பு தலைமை அலுவலகத்தில் ஒரு நாள் சேவையின் மூலம் தேசிய அடையாள அட்டைகளை பெற முடியாதவர்களுக்கு ஆட்பதிவு திணைக்களம் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் 23, 24 மற்றும் 26 ஆகிய திகதிகளில் நடைபெற்ற ஒரு நாள் சேவையின் மூலம் அடையாள அட்டைகளைப் பெற முடியாதவர்களுக்கு நாளை (30) நடைபெறும் ஒரு நாள் சேவையின் மூலம் தேசிய அடையாள அட்டைகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

கணினி அமைப்பில் ஏற்பட்ட தொழினுட்பசிக்கல்
எனவே குறிப்பிட்ட அந்த விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து ஆவணங்களுடன் உரிய அலுவலகங்களுக்கு வருகை தந்து தமது அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஆட்பதிவு திணைக்களத்தின் கொழும்பு தலைமை அலுவலகத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட தொழினுட்ப சிக்கல்கள் தற்போது சீரமைக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் மார்ச் 31-ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் பத்தரமுல்ல தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் வழமை போன்று ஒருநாள் சேவை இடம்பெறும் என அறிவித்துள்ளது.

மீண்டும் வழமைக்கு திரும்பும் பணி

ஆட்பதிவு திணைக்களத்தின் தரவு கட்டமைப்பு தொழிநுட்ப கோளாறு காரணமாக கடந்த வாரம் செயலிழந்த நிலையில், ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து பொது மக்கள் சேவையும் (27) முதல் மறு அறிவித்தல் வரும் வரை இடை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்த கணினி அமைப்பு மீண்டும் வழமைக்குத் திரும்பும் வரை அனைத்துச் சேவைகளும் இடம்பெறாது என திணைக்களம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், மார்ச் 23, 24 மற்றும் 26 ஆகிய திகதிகளில் ஒரு நாள் சேவையின் மூலம் அடையாள அட்டைகளைப் பெற முடியாதவர்களுக்கு நாளை (30) நடைபெறும் ஒரு நாள் சேவையின் மூலம் தேசிய அடையாள அட்டைகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இதேவேளை, தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களின் சாதாரண சேவை முன்வரிசை அலுவலகச் செயற்பாடுகள் எதிர்வரும் 2026 ஏப்ரல் 06-ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகும்.

கணினி கட்டமைப்பு முழுமையாகச் சீரமைக்கப்பட்ட பின்னர் அனைத்துச் சேவைகளும் தடையின்றி முன்னெடுக்கப்படும் என அந்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.