;
Athirady Tamil News

டிரம்ப்பின் தீவிர ஆதவாளர் சார்லி கிரிக் கொலையில் திடீர் திருப்பம்! வெளியான பரபரப்பு தகவல்!!

0

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதவாளர் சார்லி கிரிக் கொலையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலரும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரும், டர்னிங் பாயிண்ட் யுஎஸ்ஏ அமைப்பின் நிறுவனருமான சார்லி கிர்க், யூட்டா பல்கலைக்கழகத்தில் கடந்தாண்டு செப். 11 ஆம் தேதி நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்தபோது கழுத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தில் டைலர் ராபின்சன் என்ற 22 வயது இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

இந்த நிலையில், சார்லி கிரிக் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை இன்று (மார்ச் 31) நடைபெற்றது. இந்த விசாரணையில், சார்லி கிரிக்கை சுட்டுக் கொன்ற துப்பாக்கியில் இருந்த தோட்டாவும், அவரைக் கொன்ற டைலர் ராபின்சன் துப்பாக்கியில் இருந்த தோட்டாவும் வேறு வேறு என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வழக்கில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணம் ஒன்றை மேற்கோள் காட்டிய, ராபின்சனின் வழக்குரைஞர்கள், “பிரேதப் பரிசோதனையில் மீட்கப்பட்ட தோட்டாவும், ராபின்சன் வைத்திருந்த துப்பாக்கியுடன் தொடர்புபடுத்த மது, புகையிலை, துப்பாக்கி மற்றும் வெடிபொருள் ஆணையத்தால் முடியவில்லை என்று தெரிவித்தனர்.

அதேசமயம், சார்லி கிரிக் கொல்லப்பட்ட பின்னர் டைலர் ராபின், குறுஞ்செய்திகளில் தான் சார்லியை கொலை செய்ததை பிற நண்பர்களிடம் பகிர்ந்திருக்கிறார். மேலும், யுட்டாவில் ப்ரோவோ நீதிமன்றத்தில் முதல்முறையாக தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக ஃபெடரல் விசாரணை அமைப்பு தெரிவித்திருக்கிறது.

சமீபத்தில் டிரம்ப் தலைமையின் கீழ் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநராக இருந்து பதவி விலகிய ஜோ கெண்ட்டும் சார்லி கிரிக் கொலையில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், இந்தக் கொலைச் சம்பவத்தில் டைலர் மட்டும் தனியாக செயல்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணைக்கு மத்தியில், அமெரிக்க அரசியல் விமர்சகரும், எழுத்தாளருமான காண்டேஸ் ஓவன்ஸ், “டிரம்ப்பும், கிரிக்கின் மனைவி எரிக்கா கிரிக்கும் சேர்ந்து திட்டமிட்டு சார்லி கிரிக்கை கொலை செய்துவிட்டதாகவும்” தனது கருத்தைத் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மே மாதம் திட்டமிடப்பட்டிருந்த விசாரணையை ஒத்திவைக்குமாறும், அரசுத் தரப்பு வழக்கறிஞர்களால் ஒப்படைக்கப்பட்ட 20,000-க்கும் மேற்பட்ட கோப்புகளை ஆய்வு செய்யவும், ராபின்சனை வழக்கில் விடுவிப்பதற்கான ஆவணங்களை ஆய்வு செய்யத் தங்களுக்கு நேரம் தேவை என்றும் வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், கொலை உள்பட 7 குற்ற வழக்குகளைப் பெற்றுள்ள ராபின்சனுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என அரசுத் தரப்பு வழக்குரைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சார்லி கிரிக்கை கொன்றது யார்? என்பது தொடர்பான சந்தேகங்கள் மீண்டும் எழுந்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.