மரத்தில் இருந்து வீழ்ந்தவர் பரிதாப பலி
நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள கிர்க்ஸ்வால் தோட்டதில் மரம் ஒன்றில் இருந்து தவறி வீழ்ந்த நபர் ஒருவர் உயிரிழந்தார்.
சுமார் 35 அடி உயரமுள்ள குறித்த மரத்தில் நேற்று (23) ஏறிஅ அதன் கிளைகளை வெட்ட முற்பட்ட போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தவறி வீழ்ந்தவர் பலத்த காயங்களுடன் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
மரங்களை வெட்டுவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒரு ஒப்பந்தக்காரரின் கீழ் குறித்த நபர் பணியாற்றி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.