2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ; யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி படைத்த வரலாற்று சாதனை
2025ம் ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியாகின.
இந்நிலையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் பெற்றுக்கொண்ட பெறுபேறுகளின் விபரமும் தற்போது வெளியாகியுள்ளன. கல்லூரியின் உத்தியோகபூர்வ பக்கத்தில் குறித்த பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.
பெறுபேற்று விபரம்
இதன்படி 64 மாணவர்கள் 3A பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்துள்ளது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
அத்துடன் 31 மாணவர்கள் 2A பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்துள்ளதுடன், 21மாணவர்கள் A2B பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
வெளியான பெறுபேறுகளின் படி உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் 19 மாணவர்கள் 3A பெறுபேறுகளைப் பெற்றுள்ளதுடன் 12 மாணவர்கள் 2A பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
பௌதீக விஞ்ஞானப் பிரிவில் 42 மாணவர்கள் 3A பெறுபேறுகளைப் பெற்றுள்ளதுடன் 16 மாணவர்கள் 2A பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
வர்த்தகப் பிரிவில் 1 மாணவர் 3A பெறுபேறுகளைப் பெற்றுள்ளதுடன் 01 மாணவர்கள் 2A பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.
கலைப் பிரிவில் 2 மாணவர்கள் 3A பெறுபேறுகளைப் பெற்றுள்ளதுடன் 02 மாணவர்கள் 2A பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.
