;
Athirady Tamil News

அருச்சுனா எம்.பி உள்ளிட்ட இரு வைத்தியர்களுக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் வழக்கு

0
தெல்லிப்பழை வைத்தியசாலை புற்று நோய்ப்பிரிவு வைத்தியர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினார்கள் எனும் குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் உள்ளிட்ட இரு வைத்தியர்களுக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் யாழ்ப்பாண நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
குறித்த வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் வியாழக்கிழமை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை அவதூறு பரப்பினார் என குற்றம் சாட்டப்பட்டுள்ள வைத்தியர் ஒருவர் சட்டத்தரணி ஊடாக மன்றில் முன்னிலையாகி இருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் மன்றில் முன்னிலையாகவில்லை. அதனை அடுத்து வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 24ஆம் திகதிக்கு திகதியிட்ட மன்று அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்டுள்ள அருச்சுனா இராமநாதன் உள்ளிட்ட இருவரையும் மன்றில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தியுள்ளது.
You might also like

Leave A Reply

Your email address will not be published.