;
Athirady Tamil News

கடலில் அலையில் அடித்துச் செல்லப்பட்ட பாடசாலை மாணவர்கள் மூவர்

0

காலிமுகத்திடல் கடலில் நீராடச் சென்ற மூன்று பாடசாலை மாணவர்கள் இன்று (10) பிற்பகல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இந் நிலையில் மாணவர்களில் இருவர் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

மாளிகாவத்தை பகுதியிலிருந்து வருகை தந்த சுமார் 15 வயதுடைய பாடசாலை மாணவர்கள் குழுவொன்றே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளது.

6 பேரடங்கிய குழுவொன்று காலிமுகத்திடல் கடலில் இறங்கியதாகவும், அவர்களில் மூவரே இவ்வாறு அலைகளில் சிக்கியுள்ளனர்.

எவ்வாறாயினும், மீட்கப்பட்ட இருவரில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் காணாமல் போனவரை தேடி கடற்படை சுழியோடிகள் விசேட தேடுதல் நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.