சூழகம் ஏற்பாட்டில் புங்குடுதீவு கோட்டைக்காட்டில் பாரிய சிரமதான நிகழ்வு
சூழகம் ஏற்பாட்டில் புங்குடுதீவு கோட்டைக்காட்டில் பாரிய சிரமதான நிகழ்வு
அமரர். திருமதி தர்மலிங்கம் தனலெட்சுமி ( சிந்தாமணி ) அவர்களின் நினைவாக அன்னாரின் குடும்பத்தினரின் ரூபாய் 150000 நிதியுதவியில் புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தில் குழந்தை கடை சந்தியிலிருந்து கோட்டைக்காடு சந்தி ஊடாக கடற்கரை வரை செல்லும் பாதைகள் மனித வலு மற்றும் ஜேசிபி இயந்திரம் ஊடாக சிரமதான அடிப்படையில் துப்பரவு செய்யப்பட்டன.
அடர்ந்த பற்றைக்காடுகளாக பரவிக் காணப்படுகின்ற இப்பகுதியில் சட்டவிரோத மாட்டிறைச்சி கடத்தல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்து காணப்படுவதனால் சூழகம் அமைப்பினரிடம் பொதுமக்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) இணைப்பாளர் திரு. கருணாகரன் குணாளன், வேலணை பிரதேச சபை உறுப்பினர் திரு. கருணாகரன் நாவலன் மற்றும் சில பொதுமக்களின் பங்குபற்றுதலுடன் இச்சிரமதான செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது.
