;
Athirady Tamil News

இங்கிலாந்தில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை

0

வாஷிங்டன்,

இன்றைய டிஜிட்டல் உலகில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைத்தளங்களில் மூழ்கிக்கிடக்கின்றனர்.

இதனால் சிறுவர்களின் மனநலம் கடுமையாக பாதிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, ஆன்லைன் மூலமாக சிறுவர்களுக்கு பல்வேறு மிரட்டல்களும், அச்சுறுத்தல்களும் பெருகி வருகின்றன.

இதுகுறித்து இங்கிலாந்து அரசிடம் பெற்றோர்கள் தங்கள் கோரிக்கைகளை வைத்து வந்தனர். ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் ஏற்கனவே 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக வலைத்தள பயன்பாட்டிற்கு தடை விதித்துள்ளன. இதையெல்லாம் தீவிரமாக ஆராய்ந்த இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் தற்போது ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

அதன்படி, இங்கிலாந்தில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், தங்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஆபத்தான சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு முற்றிலும் தடை விதிக்க அவர் திட்டமிட்டுள்ளார். சிறுவர்களை பாதுகாக்க எவ்வளவு பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் என்றாலும் அவற்றை எதிர்க்க அரசு தயங்காது என்றும் அறிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.