இடி மின்னல் தாக்கி 2 பேர் வைத்தியசாலையில் அனுமதி
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லபுகலை தோட்டத்தில் இடி மின்னல் தாக்கி 2 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லபுகலை தோட்டத்தில் இன்று பெய்த கடும் மழை காரணமாக மரம் ஒன்றின் மீது இடி மின்னல் தாக்கியதன் காரணமாக குறித்த மரம் முறிந்து விழுந்துள்ளது.
முறிந்து விழுந்த மரத்தின் கிளை இருவர் மீது சாய்ந்ததன் காரணமாக படுக்காயம் அடைந்த ஆண் மற்றும் பெண் ஆகிய இருவர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.