;
Athirady Tamil News

பிரான்சில் டிரம்ப்பின் தங்க முலாம் பூசிய நிர்வாண சிலை

0

பாரீஸ்

பிரான்சில் டிரம்ப்பின் தங்க முலாம் பூசிய நிர்வாண சிலை வைக்கப்பட்டு உள்ளது.

பிரான்ஸ் நாட்டின் ஸ்டிராஸ்போர்க் நகரில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் தங்க முலாம் பூசிய நிர்வாண சிலை ஒன்று வைக்கப்பட்டு உள்ளது.

2.5 மீட்டர் உயரம் கொண்ட அதனை டென்மார்க் நாட்டின் கலைஞர் ஜென்ஸ் கால்ஸ்கியாட் வடிவமைத்து உள்ளார். இதில், கையில் நீண்ட ஒரு தங்க தடியை பிடித்தபடி, உயரம் குறைந்த மனிதர் ஒருவரின் தோள் மீது டிரம்ப் அமர்ந்திருக்கிறார்.

அநீதியின் அரசன்

23 கேரட் தங்கம் கொண்டு சிலைக்கு முலாம் பூசப்பட்டு உள்ளது. இந்த சிலையை அநீதியின் அரசன் என்றும் அழைக்கின்றனர். அதில் இடம் பெற்ற வாசகங்களில், ஏற்கனவே சுமையால் குறுகி, மூழ்கி கொண்டிருக்கும் மனிதரின் தோள் மீது அநீதியின் அரசன் அமர்ந்திருக்கிறார் என உள்ளது.

இந்த நபருக்கு உதவுவதற்காக நான் எதனையும் செய்வேன். ஆனால், இந்த மனிதரின் தோளில் இருந்து இறங்கமாட்டேன் என டிரம்ப்பை சுட்டி காட்டும் வகையில் வாசகம் உள்ளது.

பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்வதற்கான விசயங்களை தடுக்கும் முயற்சியில் டிரம்ப் ஈடுபடுகிறார் என்று அந்த கலைஞர் குற்றச்சாட்டாக கூறுகிறார். இந்த சிலை நாளை வரை அந்த பகுதியில் இடம் பெற்றிருக்கும். எனினும், சிலை பற்றி டிரம்ப் எதுவும் கூறவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.