;
Athirady Tamil News

ரூ.1 லட்சம் PUBG டாஸ்கிற்காக வீட்டை விட்டு சென்ற 14 வயது சிறுவன்; 3 நாளுக்கு பின் மீட்பு

0

ரூ.1 லட்சம் பரிசு வெல்ல PUBG டாஸ்கிற்காக வீட்டை விட்டு சென்ற 14 வயது சிறுவன், 3 நாட்களுக்கு பின்னர் சில நூறு கிலோமீட்டர்கள் தொலைவில் பேருந்து ஒன்றில் உறங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளான்.

PUBG டாஸ்கிற்காக வீட்டை விட்டு சென்ற 14 வயது சிறுவன்
உத்தரப்பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தை சேர்ந்த 8 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது,மாணவன், ரூ.1 லட்சம் பரிசு வெல்லலாம் என PUBG விளையாட்டு பணியை முடிக்க கடந்த அக்டோபர் 2 ஆம் திகதி மாலை தனது புத்தகப்பையுடன் வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.

சிறுவன் வீடு திரும்பாத நிலையில், ஒரு நாள் முன்னதாகப் பள்ளியில் 4வது படிக்கும் மாணவனுடன் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, அவன் கடத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகித்த சிறுவனின் தாய், அந்த மாணவனின் தந்தை மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

3 நாளுக்கு பின் மீட்பு
சிறுவனை தேட தொடங்கிய காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, மற்றும் சிறுவனின் மொபைல் இருப்பிடத்தை கண்காணித்து, மதுராவில் ஒரு பேருந்தில் தூங்கிய நிலையில் இருந்த சிறுவனை பாதுகாப்பாக மீட்டனர்.

மத்திய பிரதேச மாநிலத்தின் குவாலியரை நோக்கி புறப்பட்ட சிறுவன், வழிதவறி முதலில் இந்தூருக்கும் பின்னர் மதுராவுக்கும் பயணம் செய்துள்ளான்.

அவன் வீட்டிற்கு செல்லாமல் மீண்டும் தனது விளையாட்டு பணியை முடிக்க மதுராவிலிருந்து குவாலியருக்கு புறப்பட்ட போது கண்டறியப்பட்டுள்ளான்.

சிறுவன் தந்தையை இழந்த பின்னர், PUBG போன்ற விளையாட்டுகளுக்கு அடிமையானதாக தெரிவித்துள்ள காவல்துறை, குழந்தைகளின் கைபேசிப் பயன்பாடு மற்றும் இணையச் செயல்பாடுகளைக் கண்காணிக்குமாறு பெற்றோரை வலியுறுத்தினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.