;
Athirady Tamil News

ஈஸ்டர் தாக்குதல் ; பிள்ளையான் தொடர்பில் சபையில் வெளியான முக்கிய தகவல்

0

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலானது ஒரு தனித்த சம்பவமல்ல எனவும், அது 2017ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்ட ஒரு சதித்திட்டம் என்பது தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்தார் என்பதற்கான தகவல் வெளியாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
இன்று (09) நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சஹ்ரான் ஹாஷிமுக்கு மேலிருந்து அவரை இயக்கிய ஒரு நபர் மற்றும் குழு குறித்த ஆதாரங்களும் கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் வலியுறுத்தினார்.

வவுணதீவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகொலை தொடர்பான விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்பட்டிருந்தால், உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுத்திருக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள சதி மற்றும் அதற்கு உதவியளித்தமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.