பல்கலைக்கழக மாணவர்களின் வங்கிக்கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ள பணம்
மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நிதியத்தினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மார்ச் மாதத்திற்கான மஹாபொல புலமைப்பரிசில் தவணைக்கட்டணம் இன்று (10) வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது.
இதன்படி, மார்ச் மாதத்திற்குரிய 10,000 ரூபாய் மாதாந்த தவணைக்கட்டணம் மாணவர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு கிடைக்கப்பெறும் உரிய திகதி
லலித் அத்துலத்முதலி மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நிதியத்தின் ஊடாக புலமைப்பரிசில் வழங்கும் நடைமுறையைத் திறம்படச்செய்ய முடிந்ததால், மார்ச் மாதத்திற்குரிய தவணைக்கட்டணத்தைப் புலமைப்பரிசில் பெறும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உரிய திகதிக்கு முன்னதாகவே வழங்க முடிந்ததாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட தெரிவித்தார்.
இதேவேளை, 2025ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு, அரசாங்கத்தின் நிதி அனுசரணையில் வெளிநாடுகளில் இளங்கலைப் பட்டப்படிப்பைத் தொடர்வதற்கான புலமைப்பரிசில் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.