;
Athirady Tamil News

நியூசிலாந்து நாட்டை தாக்கிய புயல்; 90 விமானங்கள் ரத்து – 5 பேர் உயிரிழப்பு

0

வெல்லிங்டன்,

நியூசிலாந்தின் வடக்குத் தீவை வையாணு புயல் தாக்கியது. மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியபடி, 10 செ.மீ. அளவு பேய் மழை பெய்தது. இதனால் வார்க்வோர்த் நகரில உள்ள மவுராகி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வீடுகள், சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

வடக்குத் தீவின் வக்காட்டேன் பகுதியில் 270 வீடுகளில் இருந்த 2,500 பேர் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இதுவரை நூற்றுக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 5,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வெள்ளம் காரணமாகப் பல முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

ஏர் நியூசிலாந்து நிறுவனம் 90 விமான சேவைகளை ரத்து செய்துள்ளது. வாங்கரே. பார் நார்த் மற்றும் பே ஆப் பிளெண்டி ஆகிய பகுதிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. புயல் தற்போது தெற்கு நோக்கி நகர்ந்து ஹாக்ஸ் பே வழியாக கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் மற்றும் கனமழைக்கு 5 பேர் உயிரிழந்தனர். மாயமான 11 பேரை தேடி வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.