;
Athirady Tamil News

நாடளாவிய ரீதியில் 75 புதிய எரிபொருள் நிலையங்களைத் திறக்கத் திட்டம்

0

விலை அதிகரிப்புத் தொடர்பாக தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விரைவில் 75 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களைத் திறக்கத் திட்டமிட்டுள்ளதாக சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவிக்கையில்,

நீண்ட வரிசைகள்
குறிப்பாக கூட்டுத்தாபனத்தின் நிலையங்கள் எவையும் இல்லாத பகுதிகளில் புதிய எரிபொருள் நிலையங்களைத் திறப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், தேவை ஏற்படும் பட்சத்தில் இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தனியார் நிறுவனங்கள் மட்டுமே இயங்கும் பகுதிகளில், இந்த நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ளமையால் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.

பொதுமக்கள் சிரமப்படுவதைத் தவிர்ப்பதற்காக நாங்கள் எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்போம் என தெரவித்தார்.

வெளிமாவட்டங்கள் மற்றும் மாகாணங்களில் தனியார் நிறுவனங்களின் தற்போதைய ஏகபோக உரிமையால் பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு இணையாக கூட்டுத்தாபனத்தின் நிலையங்களையும் இயங்கச் செய்வதன் மூலம் அந்த ஏகபோகத்தை உடைக்க வேண்டும் எனவும் எரிசக்தி, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.