குழந்தையை முதுகில் கட்டிக்கொண்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வேலை செய்யும் பெண்
லடாக் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில், தனது பச்சிளம் குழந்தையைப் முதுகில் கட்டிக்கொண்டு பெட்ரோல் நிரப்பும் தாய் ஒருவரின் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலாகியுள்ளது.
வைரலான அந்த காணாளியில், எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வரும் வாகனங்களுக்குப் பெட்ரோல் நிரப்பியபடியே, தனது குழந்தையைப் பாதுகாப்பாக முதுகில் சுமந்தபடி அந்த தாய் இயல்பாகப் பணிபுரிவதைக் காண முடிகிறது.
குழந்தை ஆச்சரியத்துடன் எட்டிப் பார்க்கும் காட்சி
வேலை பளுவிலும் வாடிக்கையாளர்களிடம் அன்பாகப் பேசிப் பழகும் அவரது விதம் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.
அருகில் இருக்கும் வாகனங்களையும், சுற்றியுள்ள உலகத்தையும் குழந்தை ஆச்சரியத்துடன் எட்டிப் பார்க்கும் காட்சியும், குழந்தையை வேலைக்கு அழைத்துச் செல்ல அனுமதித்த பெட்ரோல் நிலைய உரிமையாளரின் மனிதநேயமும் சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.