;
Athirady Tamil News

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு நாமல் ராஜபக்ஷ அவசர கடிதம்

0

பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களுக்கு 2027-ஆம் ஆண்டிற்கான பாதீட்டுத் திட்டத்தில் வரி நிவாரணம் வழங்குமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

மாணவர்களின் கல்விச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையிலும், குடும்பங்களின் வாழ்வாதாரச் செலவுகள் உயர்ந்து வரும் பின்னணியிலும் இவ்வாறான வரி நிவாரணங்களை வழங்க வேண்டியதன் அவசியத்தை அவர் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோரிக்கை
அதற்கமைய, பாடசாலைப் பாடப்புத்தகங்கள், வேலைப்புத்தகங்கள், கற்றல் உபகரணங்கள், குழந்தைகளின் ஊட்டச்சத்திற்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள், உள்ளூர் பால் மற்றும் முட்டை, மற்றும் சிசுக்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவுப் பொருட்கள் மீதான பெறமதிசேர் வரி (VAT) மற்றும் ஏனைய வரிகளை மறுபரிசீலனை செய்து நீக்குவதற்கு 2027 பாதீட்டுத் திட்டத்தில் நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறான வரி நிவாரணங்களை வழங்குவது குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நேரடி உதவியாக அமைவதுடன், குழந்தைகளின் கல்வி மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய படியாக இருக்கும் என்றும் நாமல் ராஜபக்ஷ தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.