;
Athirady Tamil News

யாழில். சிறுமி துஸ்பிரயோகம் – அயலவர் கைது

0

யாழ்ப்பாணத்தில் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 38 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மூளாய் – வேரம் பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய குறித்த சிறுமியை அவரது வீட்டின் அருகே வசிக்கும் நபர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு செய்ததை அடுத்து வட்டுக்கோட்டை பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

அதேவேளை சிறுமியை மருத்துவ பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பொலிஸார் அனுமதித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.