;
Athirady Tamil News

பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க காத்திருப்போருக்கு வெளியான முக்கிய தகவல்

0

பல்கலைக்கழக அனுமதிக்கான வழிகாட்டி கைநூல் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகள் அண்மையில் வெளியானதைத் தொடர்ந்து, அரச பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான விரிவான வழிகாட்டல்கள் இக்கைநூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக நுழைவு
மாணவர்கள் பாடநெறிகளுக்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்த தெளிவான அறிவுறுத்தல்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன.

2025 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் மொத்தமாக 281,810 விண்ணப்பதாரர்கள் தோற்றியிருந்தனர்.

அவர்களில் 176,527 மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவிற்காகத் தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியுள்ள மாணவர்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக இன்று நள்ளிரவு முதல் இக்கைநூலைப் பெற்றுக்கொள்ள முடியும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.