31 ஆண்டுகள் சிறைவாசம்; பேரறிவாளன் உயர்நீதிமன்ற வழக்கறிஞராகி சாதனை!
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்ட சிறைவாசம் அனுபவித்து விடுதலையான பேரறிவாளன், இன்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தில் வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார்.
சிறையிலிருந்து விடுதலையான்பின் பேரறிவாளன் பற்றிய தகவல்கள் குறைவாகவே காணப்பட்டன. இந்த நிலையில், இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்தில் வழக்கறிஞராக பதிவு செய்திருக்கிறார்.
சிறைமீண்ட பின் சட்டம் பயின்று வழக்கறிஞராகியுள்ளார். எந்த நீதிமன்றத்தின் படிகளில் தனக்கான நீதிக்காக காவலர்கள் புடைசூழ 31 ஆண்டுகள் ஏறி இறங்கினாரோ அதே நீதிமன்றத்தில் அவர் வழக்கறிஞராகியுள்ளது குறிப்பிடத்தக்கது