;
Athirady Tamil News

சொந்த நிலத்தில் இரு விவசாயிகளுக்கு நொடிப்பொழுதில் நடந்த பெரும் துயரம்

0

அனுராதபுரம் – இப்பலோகம பகுதியில் மின்னல் தாக்கியதில் இரு விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக இப்பலோகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கலாவெவ மற்றும் விஜிதபுர பகுதிகளில் நேற்று (27) பிற்பகல் பலத்த மழையுடன் கூடிய மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகியே இந்த மரணங்கள் சம்பவித்துள்ளன.

உயிரிழந்தவர்கள் தமது விவசாய நிலங்களில் நிலத்தை தயார்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் விஜிதபுர பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவரும் 49 வயதுடைய ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இப்பலோகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.