;
Athirady Tamil News

பானிபூரி சாப்பிட்ட 6 வயது சிறுவன் உயிரிழப்பு

0

ஜார்க்கண்டில் பானி பூரி சாப்பிட்ட 6 வயது சிறுவன் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

ஜார்க்கண்டின் முஃபசில் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பஜ்டோ கிராமத்தில் சாலையோர கடை ஒன்றில் பானி பூரி சாப்பிட்ட 6 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவருக்கும் கடும் காய்ச்சலுடன் வயிற்று வலியும், வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது, இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து சுகாதார துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், தலைமறைவான நபரை போலிசார் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபரின் உடல்நலம் சீரான நிலையில் இருப்பதாகவும், மருத்துவ அறிக்கை வெளியான பின்னரே தகவல்கள் வெளிவரும் என கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.