;
Athirady Tamil News

கொச்சி தொழில்நுட்ப பல்கலைக்கழக என்ஜினீயரிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

0

எர்ணாகுளம்,

கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் புதுவைப்பு பகு தியை சேர்ந்தவர் தர்ஷனா (வயது 22). இவர் கொச்சி தொழில்நுட்ப பல்கலைக்க ழகத்தில் சிவில் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அவர் தனியார் விடுதியில் தங்கி இருந்தார்.

இந்தநிலையில் நேற்று தர்ஷனாவை, அவரது தோழிகள் செல்போனில் பலமுறை அழைத்தும், அதை ஏற்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தோழிகள் அவர் தங்கி இருந்த விடுதி அறையில் சென்று பார்த்த போது, தர்ஷனா தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. தகவல் அறிந்த களமச்சேரி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவி தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தர்ஷனாவுக்கு படிப்பு தொடர்பாக பிரச்சினை இருந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொச்சி தொழில்நுட் பல்கலைக்கழக துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.