யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி வரலாற்றில் முதல் 9A சாதனை
யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியின் கல்வி வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில், கல்லூரி மாணவன் முகம்மது ஜவ்ஸி முகம்மது ஷிபாக் அனைத்து பாடங்களிலும் “A” சித்திகளைப் பெற்று 9A என்ற அரிய சாதனையைப் பதிவு செய்துள்ளார்.
மீள்குடியேற்றத்திற்குப் பின்னர், ஒஸ்மானியா கல்லூரி வரலாற்றில் முதல் முறையாக ஒரு மாணவர் அனைத்து பாடங்களிலும் அதிசிறந்த பெறுபேறுகளைப் பெற்று இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வெற்றி, மாணவனின் தனிப்பட்ட கல்விச் சாதனையாக மட்டுமன்றி, ஒஸ்மானியா கல்லூரியின் கல்வி வளர்ச்சிப் பயணத்தில் முக்கிய மைல்கல்லாகவும் கருதப்படுகிறது.
மாணவனின் இந்த அபூர்வ சாதனை கல்லூரி சமூகத்திற்கும், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளதாக கல்விச் சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.