;
Athirady Tamil News

பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் தாக்குதல்

0

காபுல்,

பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரம் வெளியாகவில்லை.

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் மோதல்
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு நாடுகளும் பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதாக ஒன்றை ஒன்று குற்றஞ்சாட்டி வருகின்றன. அதேபோல், இரு நாடுகளும் அவ்வப்போது மோதலிலும் ஈடுபட்டு வருகின்றன.

வான்வழி தாக்குதல்
இந்நிலையில், பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. அதேவேளை, தாக்குதல் நடத்தியதாக ஆப்கானிஸ்தான் கூறிய தகவலுக்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.