;
Athirady Tamil News

தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்த ரவூப் ஹக்கீம்

0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், தமிழக பொதுப்பணி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை நேற்று வெள்ளிக்கிழமை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பின் போது, இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் மற்றும் அங்கு வாழும் சிறுபான்மையின சமூகங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இருதரப்பும் விரிவாகக் கலந்துரையாடினார்.

முதலமைச்சரை சந்தித்துப் பேச்சுவார்த்தை
இலங்கையின் சிறுபான்மையின அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து, மிக விரைவில் தமிழகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக ரவூப் ஹக்கீம் இச்சந்திப்பின் போது தமிழக அமைச்சரிடம் தெரிவித்தார்.

இந்த கூட்டு விஜயத்தின் போது, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் வாழும் சிறுபான்மை சமூகங்களின் உரிமைகள், தேவைகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் தற்போதைய சவால்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.

மேலும் இலங்கை மற்றும் தமிழக அரசியல் பிரதிநிதிகளுக்கு இடையிலான உறவுகளையும், இருதரப்பு ஈடுபாடுகளையும் மேலும் வலுப்படுத்துவது குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.