;
Athirady Tamil News

பாடசாலைகளின்  நுளம்பு கட்டுப்பாட்டு மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பான விசேட பரிசோதனை

0

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பொதுச்சுகாதார பரிசோதகர்  பிரிவில்  அமைந்துள்ள பாடசாலைகளின்  நுளம்பு கட்டுப்பாட்டு மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பான விசேட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.

குறித்த பரிசோதனை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதனின் தலைமையில் நேற்று  இவ்விசேட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது பாடசாலை வளாகங்கள், நீர் தேங்கக்கூடிய இடங்கள், பயன்படுத்தப்படாத பாத்திரங்கள் மற்றும் நுளம்பு பெருக்கத்துக்கு சாதகமான சூழல்கள் என்பன ஆய்வு செய்யப்பட்டன.

நுளம்பு பெருக்கம் காணப்பட்ட மற்றும் சுகாதார குறைபாடுகள் பதிவான பாடசாலைகளுக்கு உடனடி சுத்திகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டதுடன், அவற்றை சீரமைப்பதற்கான அவகாசமும் வழங்கப்பட்டது.

மேலும் மாணவர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினருக்கு டெங்கு நோய் தடுப்பு, சுற்றுச்சூழல் சுகாதாரம் மற்றும் நுளம்பு பெருக்கம் தவிர்ப்பது தொடர்பான விழிப்புணர்வுகளும் வழங்கப்பட்டன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.