சப்ரகமுவ பல்கலைக்கழக உபவேந்தர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்
சப்ரகமுவ பல்கலைக்கழக உபவேந்தர் பதவியிலிருந்து நீக்கம் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவியிலிருந்து பேராசிரியர் சுனில் சாந்த உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) அறிவித்துள்ளது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புதிய உபவேந்தர் ஒருவரை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் அல்லது பதில் கடமைகளை மேற்கொள்வது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.