;
Athirady Tamil News

காஸாவில் பசியில் வாடும் 16 லட்சம் பேர்! கைவிரித்த ஐ.நா. அவை!

0

போதிய நிதி இல்லாத காரணத்தால் காஸா மக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த மாதாந்திர உணவு உதவியை நிறுத்தவேண்டிய நிலை ஏற்பட்டதாக ஐ.நா. உலக உணவுத் திட்டம் கூறியுள்ளது.

காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு மத்தியில், காஸா மக்கள் சுமார் 23 லட்சம் பேரில் 14 லட்சம் பேர் உணவில்லாமல் தவித்து வருகின்றனர். இவர்களில் 2 லட்சம் பேரின் நிலை மிக மோசமானதாக உள்ளது.

காஸாவில் உணவின்றி தவித்து வரும் மக்களுக்கு ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்தின் மூலம் உணவளிக்கப்பட்டு வந்த நிலையில், உதவி பெறும் மக்களின் எண்ணிக்கையை 16 லட்சத்தில் இருந்து 11 லட்சமாகக் குறைக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வழங்கப்படும் உணவின் அளவும் பாதியாகக் குறைக்கப்படும். போதிய நிதி இல்லாத காரணத்தினால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேற்கு கரை (West Bank) பகுதியில் அடுத்த 6 மாதங்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை வழங்குவதற்கு சுமார் 450 மில்லியன் டாலர் தேவைப்படுவதாகவும் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, போர் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் சென்றடைய முடியாத பகுதிகளில் வசிப்போருக்கு இரு நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே உணவு வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.