;
Athirady Tamil News

ஆயுர்வேத சட்டத் திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

0

தேசிய மருத்துவத் துறையை மிகவும் முறைப்படி ஒழுங்குபடுத்துதல் மற்றும் தேசிய மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு உரிய அனுமதிப் பத்திரங்களை வழங்குதல் உள்ளிட்ட நோக்கங்களுக்காக 1961 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க ஆயுர்வேதச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கமைய, குறித்த சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு அறிவுறுத்தல் வழங்கப்படவுள்ளது.

ஆயுர்வேதம், சித்த, யுனானி மற்றும் தேசிய சிகிச்சை ஆகிய மருத்துவ முறைகளைக் கொண்ட இலங்கையின் தேசிய மருத்துவத் துறையை ஒழுங்குபடுத்துதல், அபிவிருத்தி செய்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றிற்காக இச்சட்டத்தின் ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

அத்துறை சார்ந்த அனைத்துக் நடவடிக்கைகளையும் மிகவும் திறம்பட முன்னெடுத்துச் செல்லுதல், ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகளை முறைப்படுத்துதல், தேசிய மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்குரிய அனுமதிப் பத்திரங்களை வழங்குதல் மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ளுதல் ஆகிய நோக்கங்களுடன் இத்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்காக சுகாதார மற்றும் ஊடக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.