;
Athirady Tamil News

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு நன்றி தெரிவித்த தமிழக முதலமைச்சர் விஜய்

0

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய் க்கு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்துத் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார்.

வாழ்த்துச் செய்தி
அதில், இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு, கலாச்சாரம் மற்றும் வர்த்தக ரீதியாக ஆழமான பிணைப்பைக் கொண்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஜனாதிபதியின் இந்த வாழ்த்துச் செய்திக்குத் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) பக்கத்தில் பதிலளித்துள்ள முதலமைச்சர் விஜய், “இலங்கை ஜனாதிபதி கௌரவ அநுர குமார திசாநாயக்க அவர்களின் வாழ்த்துக்களால் நான் மிகுந்த கௌரவமடைகிறேன். உங்களது அன்பான இந்தச் செயலுக்கு எனது நன்றிகள்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற ஒரு சில நாட்களிலேயே, அண்டை நாட்டுத் தலைவரிடமிருந்து கிடைத்த வாழ்த்தும், அதற்கு முதலமைச்சர் அளித்துள்ள நாகரீகமான பதிலும் அரசியல் வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.