நள்ளிரவில் அரங்கேறிய கொள்ளை சம்பவம் ; பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் சந்தேகநபர் கைது
இரத்தினபுரி, குருவிட்ட – வெலிஹிந்த (Welihinda) பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் நள்ளிரவில் புகுந்து, கூறிய ஆயுதத்தை காட்டி அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி இரத்தினக்கற்கள் மற்றும் தங்க ஆபரணங்களைக் கொள்ளையிட்ட 35 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை இரத்தினபுரி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணை
கடந்த 12ஆம் திகதி கிடைத்த இரகசியத் தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட இரத்தினக்கற்கள், தங்க நகைகள் மற்றும் ஏனைய பெறுமதியான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
நேற்று இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேக நபர், எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து இரத்தினபுரி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.