;
Athirady Tamil News

குழந்தைகள் பாதுகாப்பு விவகாரம் ; எக்ஸ் நிறுவனத்திற்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் அபராதம்

0

ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் உள்ளடக்கங்களை தங்களின் தளத்தில் எவ்வாறு கையாளப்பட்டது என்பது தொடர்பான முழுமையான தகவல்களை வழங்கத் தவறியதற்காக X (முன்னாள் Twitter) நிறுவனத்திற்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

ஆஸ்திரேலிய நீதிமன்றம், குறித்த நிறுவனத்திற்கு 6.5 லட்சம் ஆஸ்திரேலிய டாலர் அபராதம் விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2023 பிப்ரவரியில் ஆஸ்திரேலியாவின் சைபர் பாதுகாப்பு ஆணையம் எழுப்பிய கேள்விகளுக்கு முழுமையான பதில்கள் வழங்கப்படவில்லை எனவும், இதன் மூலம் நாட்டின் சைபர் பாதுகாப்புச் சட்டம் மீறப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

X நிறுவனம், ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றிய காலகட்டத்தில் தகவல் பரிமாற்றத்தில் தாமதம் ஏற்பட்டதாக வாதிட்டிருந்தது.

எனினும், உலகளாவிய பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் சட்டப் பொறுப்புகளை லேசாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதையும், பயனர் பாதுகாப்பு மற்றும் குறிப்பாக குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் உறுதிப்படுத்தவே இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.