;
Athirady Tamil News

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள்

0
video link-

நிந்தவூர் கலாச்சார மண்டபத்தின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பித்து வைக்கும் நோக்கில்  ஜனாதிபதி   இன்று  விஜயம் மேற்கொள்ள நிலையில் மூன்றடுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

ஜனாதிபதியின்  வருகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் தொடர்பான ஆய்வுகள் துறைசார் அதிகாரிகள் முன்னெடுத்திருந்தனர்.

முப்படையினர்களின் உயர் அதிகாரிகள் பொலிஸார் இணைந்து இதர பாதுகாப்பு தரப்பினர் நவீன ஆயுதங்கள் ட்ரோன்  கவச வாகனங்கள் உதவியுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதை அவதானிக்க முடிந்தது.

நிகழ’வு நடைபெறுகின்ற இடத்தின் அருகில் உயர்ந்த கட்டடங்கள் மரங்களில் ஏறி நின்று பாதுகாப்பு தரப்பினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டனர்.

விமானப்படையினர் புதிய ரக துப்பாக்கிகளுடன் இந்நிகழ்விற்கு பாதுகாப்பு வழங்கியதை காண முடிந்தது.

அத்துடன் தனியார் ஊடகங்களுக்கு சுதந்திரமாக செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்ததுடன் அரச ஊடகங்களுக்கு அங்கு நடைபெற்ற சகல நிகழ்விற்கும் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்த பாரபட்சமான சம்பவம்  இங்கு   இடம்பெற்றுள்ளது.

இதன் போது ஜனாதிபதி ஊடகப்பிரிவிற்கு பொறுப்பான நபரினாலும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினராலும் இவ்வாறான அநீதி இழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தகவல்  திணைக்களம் ஊடாக குறித்த நிகழ்விற்கு வழங்கப்பட்ட பெயர் பட்டியலில் இருந்த தனியார் ஊடகங்களின் ஊடகவியலாளர்கள் குறித்த நிகழ்விற்கு அழைத்து பரிசோதனை செய்யப்பட்டு உள்ளே அழைத்து செல்லப்பட்ட போதும் ஜனாதிபதி ஊடகப்பிரிவிற்கு பொறுப்பான நபரினாலும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினராலும்  செய்தி சேகரிப்பது தொடர்பில்  முற்றாக தடுக்கப்பட்டனர்.

தனியார் ஊடகங்களுக்கு சுதந்திரமாக செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்ததுடன் அரச ஊடகங்களுக்கு அங்கு நடைபெற்ற சகல நிகழ்விற்கும் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.