;
Athirady Tamil News

கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கை தமிழர் மரணம்!

0

கனடாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட இலங்க்கை தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடுகடத்தப்பட்ட நபை தாயகத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த 2010 ஆம் ஆண்டு குறித்த நபர் mv sun sea கப்பலில் கனடா சென்று ஏதிலி கோரிக்கையை விடுத்திருந்தார்.

வன்கூவரில் அகதிகளாக தஞ்சம்
2010 ஆகஸ்ட் 13 அன்று கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியை mv sun sea கப்பல் சென்றடைந்தது.

mv sun sea கப்பலில் சென்ற 492 இலங்கை தமிழர்கள் கனடாவில் தஞ்சம் கோரி இருந்தனர். இந்நிலையில் குறித்த நபரின் தஞ்சகோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடுகடத்தப்பட்ட நிலையில் கடந்த 17 ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டு போரின் காரணமாக இலங்கை அரசாங்கத்தால் தங்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலையிலிருந்து தப்பி வந்த 380 ஆண்கள், 63 பெண்கள் மற்றும் 49 தமிழ் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு, எம்.வி. சன் சீ என்ற கப்பல் பிரிட்டிஷ் கொலம்பியாவின் எஸ்கிமால்ட் துறைமுகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.