;
Athirady Tamil News

விமல் வீரவங்ச பிணையில் செல்ல அனுமதி

0

தலங்கம பொலிஸாரினால் இன்று (25) முற்பகல் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான 2 சரீரப் பிணைகளின் கீழ் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள இராணுவ நினைவிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இராணுவ வெற்றி கொண்டாட்டத்திற்கான ஒத்திகை நிகழ்வுக்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (25) தலங்கம பொலிஸ் நிலையத்தில் அவர் முன்னிலையானார்.

இந்நிலையில் வாக்குமூலம் வழங்கலின் பின்னர் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.