;
Athirady Tamil News

பல்கலை மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை ; பிறந்த நாள் விழாவில் கொடூரம் ; அடுத்தடுத்து நடந்த சம்பவம்

0

சென்னை பல்லாவரத்தில் கல்லூரி மாணவிக்கு போதைப் பொருளை கொடுத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவரிடம் சக மாணவர் ஒருவர் நட்பாக பழகியுள்ளார்.

கடும் நடவடிக்கை
திடீரென பிறந்தநாள் கொண்டாட உள்ளோம் என வரவழைத்துள்ளனர். இந்நிலையில், பிறந்த நாள் விழா நடக்கும் இடத்தில் மாணவர்கள் தங்கிய அறையில் முன்னாள் மாணவர்கள் பலரும் இருந்துள்ளனர்.

அப்போது மாணவிக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவி மயக்க நிலைக்கு சென்றதும் 5-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து அவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அந்த கொடூர செயலை வீடியோவாகவும் எடுத்துள்ளனர். தனக்கு நேர்ந்த கொடூரத்தை வெளியே சொன்னால் அந்தரங்க வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவதாகவும் கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, வீடியோவை காட்டி மாணவியின் தோழிகள் மூன்று பேரையும் வலுக்கட்டாயமாக அழைத்து அடாவடி மாணவர்கள் அத்தமீறியுள்ளனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி சங்கர் நகரில் உள்ள பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 5 பேர் மீது புகார் அளித்தும் போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுபோன்று மாணவிகளிடம் அத்துமீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது பல்கலைக்கழக நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மாறாக, புகார் கொடுத்த மாணவியையே பல்கலைக்கழகம் நீக்கியுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.