;
Athirady Tamil News

வவுனியாவில் ‘வளமான நாடு அழகான வாழ்க்கை’ சமூக சக்தி வேலைத்திட்டம்: நெல் உலர்த்தும் தளம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது!

0
வவுனியாவில் ‘வளமான நாடு அழகான வாழ்க்கை’ சமூக சக்தி வேலைத்திட்டம்: நெல் உலர்த்தும் தளம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது!

தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘வளமான நாடு அழகான வாழ்க்கை’ சமூக சக்தி வேலைத்திட்டத்தின் கீழ், வவுனியா கந்தபுரம் கிராமத்தில் நெல் உலர்த்தும் தளம் மற்றும் களஞ்சியசாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்று (02.06) இடம்பெற்றிருந்தது.

கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் நிதி ஒதுக்கீடு மற்றும் வழிகாட்டலின் கீழ் குறித்த தேசிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் மற்றும் வவுனியா பிரதேச செயலாளர் இ. பிரதாபன் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகக் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.

இவ்விழாவில் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர்இ கிராம உத்தியோகத்தர்இ அரச அதிகாரிகள் மற்றும் கந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இத்திட்டத்தின் மூலம் அப்பகுதி விவசாயிகளின் நீண்டகால தேவையாக இருந்த நெல் உலர்த்துதல் மற்றும் பாதுகாப்பாகக் களஞ்சியப்படுத்துதல் போன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.