;
Athirady Tamil News

தொடரும் தாக்குதல்: ஈரானின் 2 டிரோன்களை வீழ்த்திய அமெரிக்கா!

0

ஹோர்முஸ் நீரிணையில் 2 ஈரானிய டிரோன்களை அமெரிக்க மத்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்துள்ளது.

ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த பிப்.28 ஆம் தேதி தொடங்கிய போர், பேச்சுவார்த்தைகளில் தீர்வு கிடைக்காததால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக இருந்த இரண்டு ஈரானிய டிரோன்களை அமெரிக்க மத்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.

இது குறித்து அமெரிக்க மத்திய ராணுவம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிடிருப்பதாவது:

மத்திய கிழக்கில் உள்ள கோர்முஸ் நீரிணையில் சர்வதேச கடல்வழிப் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக இருந்த இரண்டு ஈரானிய டிரோன்களை அமெரிக்க மத்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. ஈரானின் நடவடிக்கைகளிலில் இருந்து தற்காத்துக் கொள்ள அமெரிக்கப் படைகள் மத்திய கிழக்கில் தயார் நிலையில் உள்ளன என்று பதிவிட்டுள்ளது.

உலகளவில் முக்கிய எண்ணெய் வழிப் போக்குவரத்தான ஹோர்முஸ் நீரிணை வழக்கம் போல் செயல்படாமல் உள்ளதால் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்து, எரிபொருள்கள் விலை ஏற்றத்தைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.