மறைந்த மருத்துவ இயற்பியல் பேராசிரியர் நாகலிங்கம் சுந்தரலிங்கம் நினைவுப் பேருரை நேற்றைய தினம் புதன்கிழமை யாழ் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் ஜனாதிபதி நோய் தணிப்பு பராமரிப்பு சங்க தலைவர் ப்ரீத்தி விஜய குணவர்த்தன தலைமையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் வட பிராந்தியத்தில் முன்னோடி புற்றுநோய் சிகிச்சை ஆரம்பகால அனுபவங்களும் நீடித்த படிப்பினைகளும் என்ற தொனிப்பொருளில் மறைந்த மருத்துவ இயற்பியல் பேராசிரியர் நாகலிங்கம் சுந்தரலிங்கம் காலத்தில் சேவையாற்றிய மருத்துவ புற்றுநோயியல் ஆலோசகர். இலங்கை தேசிய புற்றுநோயியல் நிறுவனம் வைத்திய கலாநிதி நடராஜா ஜெயக்குமாரன் நினைவு பேருரை நிகழ்த்தினார்.
குறித்த நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி சுரேந்திர குமார் , இயற்பியல் பேராசிரியர் ரவிராஜன், யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சிறிசற்குணராஜா, யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாயத்துறை பிடாதிபதி பகீரதன், யாழ் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், கிளிநொச்சி மாவட்ட செயலர் முரளிதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.